புதிய வேளாண் சட்டங்களால் விவசாயம் இனி மெல்ல அழியுமா? கார்ப்பரேட்டுகளின் கை ஓங்குவது விவசாயிகளுக்கு நன்மையா, தீமையா

பெரும்பான்மை என்கிற ஓர் ஆயுதத்தை வைத்துக்கொண்டு, பலத்த எதிர்ப்புகளையும் மீறி நாடாளுமன்றத்தில் புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜ அரசு. விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம், வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டு சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்கள்தான் அவை. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் அடிமையாக்கவே வகை செய்யும், பொதுவிநியோக முறையை சீர்குலைக்கும், பதுக்கல் அதிகரிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேநேரத்தில் இப் புதிய சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும், விலைவீழ்ச்சி அபாயத் திலிருந்து அவர்களை காக்கும், வேளாண் மசோதாக்கள் பற்றி எதிர்க்கட்சிகள் பொய் சொல்லிவருகின்றன என கூறி வருகிறது மத்திய அரசு. உண்மையில் இச் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை அளிக்குமா அல்லது தீமை விளைவிக்குமா என்பது குறித்து இப் பகுதியில் நான்கு பேர் அலசுகின்றனர்.

Related Stories: