செயற்குழுவில் எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்க வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுறுத்தல்

மதுரை: அதிமுக செயற்குழுவில் எடுக்கப்படும் எந்த முடிவாக இருந்தாலும் கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுறுத்தியுள்ளார். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை வகித்து பேசியதாவது: நீட் தேர்வை நாம் எதிர்த்தாலும் கூட, அத்தேர்வால் பாதிப்பு இருக்கும் என தெரிந்தும் மாணவர்களை மீட்டெடுக்க அறிவுப்பூர்வமான கேள்விகளை தயாரித்து, அதற்கான பாடத்திட்டங்களை உருவாக்கினோம். முதல்வருக்கு ஈடாக துணை முதல்வரும், அதிமுக அரசை வெற்றி பெற வைக்க உழைத்துக்கொண்டிருக்கிறார்.இன்று நடைபெறும் அதிமுக செயற்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. எந்த முடிவு எடுத்தாலும், அதனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>