துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது

தண்டையார்பேட்டை: கொளத்தூரை சேர்ந்த ரவுடி ராஜசேகர் (40). பிரபல ரவுடி கல்வெட்டு ரவியின் கூட்டாளியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு சம்பந்தமாக இவரை கொருக்குப்பேட்டை போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று மாதவரம் பகுதியில் இவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். பிரபல ரவுடி கல்வெட்டு ரவி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அதிலிருந்து தொடர்ச்சியாக அவரது கூட்டாளிகள், தம்பி உள்பட 14 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

>