நிலக்கரி சுரங்கத்தில் தீ 16 பேர் பரிதாப பலி

பீஜிங்: சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 16 தொழிலாளர்கள் பலியாகினர். சீனாவில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கங்கள் அதிகளவில் உள்ளன. இவற்றில் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் குறைவாகவே இருப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ச்சேதங்கள் நடக்கும். தென்மேற்கு சீனாவில் உள்ள கிஜியாங் மாவட்டத்தில், சியோகுங் நகராட்சி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் உள்ளது. இதில், நேற்று முன்தினம் இரவு 17 தொழிலாளர்கள் வேலை செய்தனர். அப்போது, இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்து, சுரங்கம் முழுவதும் புகை பரவியது. இதனால், தொழிலாளர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு சுருண்டு விழுந்தனர். மீட்பு படையினர் விரைந்து வந்து, ஒரு தொழிலாளியை மட்டுமே காப்பாற்றினர். மற்ற 16 தொழிலாளர்களும் அங்கேயே இறந்தனர். இது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories:

>