×

அருமையாக ஆடுகிறார் கில்... இயான் மோர்கன் பாராட்டு

துபாய்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இளம் வீரர் ஷுப்மன் கில் (21 வயது) மிகச் சிறப்பாக விளையாடுகிறார் என்று சக வீரர் மோர்கன் பாராட்டி உள்ளார். ஐதராபாத் அணியுடன் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் 143 ரன் என்ற இலக்கை துரத்திய நைட் ரைடர்ஸ் அணி, 18 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 70 ரன் (62 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), மோர்கன் 42 ரன்னுடன் (29 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 92* ரன் சேர்த்து அசத்தியது. கில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

கில்லுடன் இணைந்து விளையாடியது குறித்து மோர்கன் கூறியதாவது: இளம் வீரர் கில் அற்புதமாக விளையாடினார். அவருக்கு எந்த ஆலோசனையும் கூற வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. அவரது ஆட்டம் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. கில் மட்டையை சுழற்றும் விதம் மற்றும் பாணி வெகு சிறப்பு. புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். அவருடன் மீண்டும் இணைந்து விளையாடும் தருணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.  இவ்வாறு மோர்கன் பாராட்டி உள்ளார். கேகேஆர் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை மறுநாள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்கிறது. இப்போட்டி துபாயில் இரவு 7.30க்கு தொடங்கும்.

Tags : Gill ,Ian Morgan , Gill plays wonderfully ... Ian Morgan compliment
× RELATED கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன்...