ஐக்கிய ஜனதாதளம் கட்சி நிர்வாகிகள் தேர்வு

சென்னை: சென்னையில் நேற்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் பி.எம்.விஜயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் புதிய மாநிலத் தலைவராக பி.என்.கே.இந்தியன் தேர்ந்து எடுக்கப்பட்டார். அதைப்போன்று செயல் தலைவராக ஆர்.லட்சுமணன், தலைமை பொதுச்செயலாளராக லோகநாதன், பொருளாளராக பிந்து, பொதுச்செயலாளராக எஸ்.பி.எல்லப்பன், துணைத் தலைவர்களாக எஸ்.சுந்தரராஜன் உள்பட 5 பேரும், மாநில செயலாளராக கே.மணி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். ஐக்கிய ஜனதா தளம் சார்பாக ராஜ்யசபை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக தேசிய தலைவர் நிதீஷ்குமாருக்கும், பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>