தமிழக பாஜ தலைவரின் வெற்றிவேல் யாத்திரைக்கான பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளும் வெற்றி வேல் யாத்திரைக்கான பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக பாஜ தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜ தலைவர் எல்.முருகனின் வெற்றி வேல் யாத்திரை அக்டோபர் மாதம் முழுவதும் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதற்கு மாநில பொறுப்பாளராக பாஜ மாநில துணை தலைவர் கே.எஸ்.நரேந்திரன், மாநில இணை பொறுப்பாளராக பாஜ இளைஞர் அணியின் மாநில தலைவர் வினோஜ் பி.செல்வம் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

வெற்றி வேல் யாத்திரையை சிறப்பான முறையில் வழி நடத்துவதற்கு மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவில் பாஜ மாநில துணை தலைவர் எம்.முருகானந்தம், மாநில செயலாளர்கள் டி.வரதராஜன், ஏ.பாஸ்கர், மாநில இணை பொருளாளர் எம்.சிவசுப்பிரமணியன், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் சுப நாகராஜன், காளிதாஸ், பாயிண்ட் மணி, வர்த்தகர் பிரிவு மாநில தலைவர் ஏ.என்.ராஜ கண்ணன். ஊரக, நகர்ப்புற வளர்ச்சி பிரிவு தலைவர் பி.பாஸ்கர், மாவட்ட வியாபாரிகள் ஆர்.பி.கோபிநாத், மோகன் மந்திராசலம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சசிராமன், வி.அருள், மாநில விவசாய அணி துணை தலைவர் அஜய் மூப்பனார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories:

>