அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அதிமுக செயற்குழு திடீரென கூடுவது ஏன்?

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் திடீரென கூடுவது ஏன் என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தல் ஆணைய விதிகளுக்கு உட்பட்டு ஆண்டுக்கு ஒரு முறை செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கூடும். அந்த வகையில் தான் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. வேறு எதற்காகவும் செயற்குழு கூட்டம் நடைபெறவில்லை. அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். மேலும், ஆட்சிக்கு ஒருவருக்கும், கட்சி ஒருவருக்கும் என்பதெல்லாம் கட்சியின் கொள்கை முடிவு. அது குறித்து கட்சி தான் முடிவு செய்யும். உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருக்கும் அவைத்தலைவர் மதுசூதனனை நலம் விசாரிக்கவே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்தார். ஒரு கட்சிக்குள் ஒரு தலைவரை மற்றொரு தலைவர் சந்திப்பது இயல்பு தான்’ என்றார்.

Related Stories: