×

''வெறித்தனம்''காட்டிய ராகுல், அகர்வால் ஜோடி; ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி

ஷார்ஜா: : ஐபிஎல் 2020 டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக மயங்க் அகர்வால் பட்டைய கிளப்பினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

4.3 ஓவரில் 50 ரன்னைக் கடந்த பஞ்சாப், 8.4 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது. இதற்கிடையில் மயங்க் அகர்வால் 26 பந்தில் அரைசதம் கடந்தார். 10 ஓவர் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் குவித்தது. மயங்க் அகர்வால் 69 ரன்களும், லோகேஷ் ராகுல் 36 ரன்கள் எடுத்திருந்தனர். அரைசதம் அடித்த பின் மயங்க் அகர்வால் ருத்ர தாண்டவம் ஆடினார்.

13.2 ஓவரில் பஞ்சாப் அணி 150 ரன்னைக் கடந்தது. இதற்கிடையில் கேஎல் ராகுல் 35 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஜெட் வேகத்தில் சென்ற மயங்க் அகர்வால் 15-வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 45 பந்தில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் சதம் அடித்தார். கடந்த போட்டியில் கேஎல் ராகுல் சதம் அடித்த நிலையில், இந்த போட்டியில் மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதனையடுத்து பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. மேலும் 48 பந்துகளில் 106 ரன்களை எடுத்து அதிரடியாக விளையாடினார். இதனையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.

Tags : Agarwal ,Rahul ,Punjab ,Rajasthan , Rahul and Agarwal pair '' frenzied ''; Punjab set a target of 224 for Rajasthan
× RELATED வீரர்களை அவமதித்து விட்டார் - ராகுல்