திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் பெரியார் சிலை அவமதிப்பு: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

சென்னை: திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் இழிவுபடுத்தி அவமதித்துள்ளனர். நள்ளிரவில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றியும், செருப்பு வீசியும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர்.  இந்நிலையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது, பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை  தெரிவித்துக்கொள்கிறேன். ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மக்களிடமிருந்து பறக்கணிக்கப்படுவோம் என்பதை உணர்வார்களா?. பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல, தமிழ் இயக்கத்தின் தலைவர். பெரியாரை அவமதிப்பதாக நினைத்து செய்பவர்கள் தங்களை தாங்களே அவமரியாதை செய்துகொள்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>