×

சுற்றுலா பயணிகளுக்காக ரூ4 கோடியில் வாங்கிய புதிய படகு கன்னியாகுமரி வருகை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிடுவதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளை இயக்கி வருகிறது. சீசன் காலங்களில் அதிக சுற்றுலா பயணிகள் வரும்போது, நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனை தவிர்க்க கூடுதலாக 2 படகுகள் வாங்க பூம்புகார் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது. அதில் ஒரு படகு கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரி கொண்டு வரப்பட்டது.

கொரோனா ஊரடங்கால் அந்த படகு இயக்கப்படாமல், பூம்புகார் படகுதுறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரூ.4 கோடி செலவில் கட்டப்பட்ட மேலும் ஒரு படகு கடந்த 23ம் தேதி கோவாவில் இருந்து புறப்பட்டு  கன்னியாகுமரி வந்து சேர்ந்தது. இதிலும் 150 பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும். 27 மீட்டர் நீளம் 7 மீட்டர் அகலம் கொண்டது. இதனை கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுதுறையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Tags : Kanyakumari , New boat bought for Rs 4 crore for tourists arrives in Kanyakumari
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...