ராமநாதபுரம் அருகே சிறுவன் உள்பட 5 பேர் மீது தாக்குதல்!.. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்காததால் ஆத்திரம்.!!!

ராமநாதபுரம்:  ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவில்லை என கூறி சிறுவன் உள்பட 5 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 385 இடங்கள் இருந்தன. இந்நிலையில் தேர்தலின்போது ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நகிரிக்காத்தான் கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்றார்.

 இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த அவர், ஒரு சிலர் ஓட்டு போடாததாலேயேதான் தோல்வியுற்றதாக கூறி அதே ஊரை சேர்ந்த போஸ், அருளாயி, அஞ்சலி தேவி, அரவிந்த் மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோரை கருப்பையா மற்றும் அவரது மருமகன் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அனைவரும் திருவாடானை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவாடானை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதற்காக தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

Related Stories: