நான் விண்வெளி பறவை

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

காஷ்மீரைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஆயிஷா அஜிஸ். சிறு வயதிலே விமானங்களை ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமத்தை பெற்ற முதல் இந்தியப் பெண். இவர் தற்போது ஒலியை விட வேகமாக செல்லும் ஜெட் போர் விமானத்தை இயக்கவிருக்கும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். சிறு வயதில் இருந்தே விமானம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்திருக்கிறார் ஆயிஷா அஜிஸ். அவருடைய ஆர்வத்தை தெரிந்து கொண்ட இவரின் பெற்றோர்கள் 10ஆம் வகுப்பு படித்து முடித்ததும் விமான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

இது குறித்து பேசிய ஆயிஷா அஜிஸ்... “மும்பையில் இருந்து எங்கள் மண்ணான காஷ்மீருக்கு என்னுடைய குடும்பத்துடன் அவ்வப்போது விமானத்தில் சென்று வருவோம். விமானம் எழும்போதும், இறங்கும்போதும் என்னுடைய சகோதரன் பயத்தில் உறங்கி விடுவான். நான் ஆர்வமாக அதை ரசித்தபடியே கவனித்துக்கொண்டிருப்பேன். அந்த ஆர்வம்தான் நான் ஒரு விமானியாக வேண்டும் என்கிற ஆசையைத் தூண்டியது.

என்னுடைய விருப்பத்தை அறிந்து கொண்ட என் பெற்றோர்தான் நான் 10ஆம் வகுப்பு முடித்ததும் விமானம் ஓட்டும் பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டனர். பயிற்சிக்கு பின் 16 வயதில் விமான ஓட்டுநர் உரிமத்தை பெற்றேன். இந்தியாவில் சிறு வயதிலே விமானம் ஓட்டும் உரிமத்தை பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றது மட்டுமல்லாமல் என்னுடைய இலக்கை அடைந்து விட்டேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு சில கனரக விமானங்களை இயக்க 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் என்று நிபந்தனை இருக்கிறது. தற்போது 20 வயதை எட்டிய நிலையில் அதிவேகமாக செல்லக் கூடிய போர் விமானத்தை இயக்கப் போகும் முதல் இந்தியப் பெண்ணாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். என்னுடைய இந்த வெற்றிக்கு பெற்றோர் முக்கிய காரணமாக இருந்தார்கள். “விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்தான்

என்னுடைய முன்மாதிரி” என்றார்.  

-ஆயிஷா அஜிஸ், 

ஜெ.சதீஷ்

Related Stories: