×

திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமதிப்பு: சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டம்.!!!!

திருச்சி: திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தற்போது சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது  காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு அணிவித்தும் சமூக விரோதிகள் அவமதிப்பு செய்துள்ளனர். இச்சம்பவதற்கு கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர், பெரியார் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  

பெரியார் சிலையை அவமதித்த சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி முழக்கம் எழுப்பி திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட  விரோதிகளை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டாம் என்றும் தமிழ்நாடு முழுவதும் இந்த போராட்டத்தை முன் எடுத்து செல்வோம் என்றும் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பெரியார் சிலையை அவமதித்த  நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் கடந்த 3-ம் தேதி அரியலூர் மாவட்டம் தேளூர் ஊராட்சி சமத்துவப் புரத்தில் உள்ள மார்பளவு கொண்ட பெரியார் சிலையின் மீது தார் ஊற்றப்பட்டு  அவமதிக்கப்பட்டிருப்பது. இதையடுத்த திராவிடர் கழகம் மற்றும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Periyar ,organizations ,Trichy , Insulting the Periyar statue in Trichy: Various organizations struggle to arrest social enemies. !!!!
× RELATED பெரியார் சிலையை அவமதித்தை கண்டித்து தி.க.வினர் ஆர்ப்பாட்டம்