×

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடியாக உயர்வு: 9.98 லட்சம் பேர் பலி...2.44 கோடி பேர் குணம்.!!!

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்தை கடந்தது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 30 லட்சத்து 53 ஆயிரத்து 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 76 லட்சத்து 48 ஆயிரத்து 501 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 293 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 44 லட்சத்து 05 ஆயிரத்து 921 பேர் குணமடைந்துள்ளது. ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 98 ஆயிரத்து 716 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 7,287,561
இந்தியா - 5,990,581
பிரேசில் - 4,718,115     
ரஷியா - 1,143,571
கொலம்பியா - 806,038
பெரு - 800,142
மெக்சிகோ - 7,20,858
ஸ்பெயின் - 7,35,198
அர்ஜெண்டினா - 6,91,235
தென் ஆப்பிரிக்கா - 669,498     

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 209,177     
பிரேசில் - 141,441     
இந்தியா - 94,534
ரஷ்யா- 20,225
கோலம்பியா- 25,296
தென் ஆப்பிரிக்கா-16,376     
பெரு - 32,142

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா - 4,938,688    
அமெரிக்கா - 4,524,108     
பிரேசில் - 4,050,837
ரஷியா - 940,150    
கொலம்பியா - 700,112
பெரு - 657,836             
தென் ஆப்ரிக்கா - 601,818

Tags : corona victims , Worldwide, the number of corona victims has risen to 3.30 crore: 9.98 lakh people have died ... 2.44 crore people have recovered !!!
× RELATED 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு: நேற்று ஒரே நாளில் 19,182 பேர் குணமடைந்தனர்