×

88வது பிறந்தநாள் விழா: மன்மோகன் சிங்குக்கு மோடி, ராகுல் வாழ்த்து

புதுடெல்லி: நேற்று தனது 88வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் நேற்று தனது 88வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். இதை முன்னிட்டு, பிரதமர் மோடியும், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘டாக்டர் மன்மோகன் சிங் ஜீக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன், நீண்டநாள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்,’ என கூறியுள்ளார்.

ராகுல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மன்மோகன் சிங்குங்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது பதிவில்,  ‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தற்போது பிரதமர் பதவியில் இல்லாத குறையை, இந்தியா மிகவும் ஆழமாக உணர்கிறது. அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாகும்,’ என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Birthday Celebration ,Modi ,Rahul ,Manmohan Singh , 88th Birthday Celebration: Modi and Rahul congratulate Manmohan Singh
× RELATED வேலம்மாள் நெக்சஸ் குழுமத்தில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா