அமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எதிர்பபு

வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரூம் பேடர் கின்ஸ்பர்க் மறைவினால் ஏற்பட்டுள்ள காலியிடத்தில் நீதிபதி அமிகோனி பாரெட் நியமிக்க, அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருகிறார். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு வழக்கையும்  ஒன்பது நீதிபதிகளும் ஒன்றாக அமர்ந்து விசாரிப்பார்கள். உலகின் பிற நாடுகளில் உள்ளதை போன்று அவர்களுக்குப் பணி ஓய்வு கிடையாது. இறக்கும் வரை அவர்கள் பணியாற்றலாம். இந்நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் கருப்பர்கள், பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க், தனது 87வது வயதில் புற்றுநோயால் கடந்த 19ம் தேதி காலமானார். இவர் 27 ஆண்டுகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்துள்ளார்.  இவர் இறந்ததை அடுத்து காலியாக உள்ள பணியிடத்துக்கு நீதிபதி அமிகோனி பாரெட் பெயரை அதிபர் டிரம்ப் பரிந்துரைக்க உள்ளார். 48 வயதாகும் பாரெட், தற்போது 7வது சர்கியூட் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். இப்பதவிக்கும் அவருடைய பெயரை அதிபர் டிரம்ப்தான் கடந்த 2017ல் பரிந்துரை செய்தார்.

 எனவேதான், கடும் எதிர்ப்பையும் மீறி, உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு டிரம்ப் இவரை பரிந்துரைக்க உள்ளார். அதிபர் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியை நிரப்ப டிரம்ப் முனைப்பு காட்டுவதற்கு, அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடென் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘தபால் வாக்குப்பதிவில் குளறுபடி ஏற்பட்டு, அதிபர் தேர்தலில் தான் தோற்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்,’ என டிரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இந்த நியமனம் மிகவும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

Related Stories:

>