×

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 லட்சம்: பலி 93,379 ஆக உயர்ந்தது

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்கியது.  நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
* நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக் 59,03,092 ஆக அதிகரித்துள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85,362 பேர் பாதித்துள்ளனர்.
* கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 1089 பேர் இறந்துள்ளனர். இதனால், மொத்த பலி 93,379 ஆக உயர்ந்துள்ளது.
* நாடு முழுவதும் சிகிச்சை பெற்ற 48,49,584 பேர் குணமாகி உள்ளனர்.
* கடந்த 24 மணி நேரத்தில் 93,420 பேர் குணமாகி இருக்கின்றனர்.
* 9,60,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* கடந்த மாதம் 7ம் தேதி மொத்த கொரோனா பாதிப்பு 20 லட்சமாக இருந்தது. கடந்த 16ம் தேதி இது 50 லட்சமாக அதிகரித்தது.
* நாடு முழுவதும் இதுவரை 7 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 975 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டுமே 13 லட்சத்து 11 ஆயிரத்து 535 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை நேற்றிரவு 60 லட்சத்தை நெருங்கியது.

Tags : Corona ,India , Corona impact in India rises to 60 lakh: death toll rises to 93,379
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...