×

வெளிநாடுகளில் தவித்த 1,046 இந்தியர்கள் மீட்பு

சென்னை: கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக  வெளிநாடுகளில் தவித்த 1,046 இந்தியர்கள் 10 சிறப்பு மீட்பு  விமானங்களில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, துபாய், அபுதாபி, கத்தார், ஓமன், சார்ஜா ஆகிய 10 நாடுகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் சிக்கித் தவித்த இந்தியர்களில் 1046 பேர் 10 சிறப்பு மீட்பு  விமானங்களில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 40 பேர் ஓமன் நாட்டு அரசால் திருப்பி அனுப்பப்பட்டவர்கள். அவர்களுக்கு குடியுரிமை விசாரணை முடிந்து தாம்பரத்தில் உள்ள அரசு முகாமில் 14  நாட்கள் தனிமை காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் தவிர 1006 பேருக்கு குடியுரிமை, சுங்கம், மருத்துவ சோதனைகள் முடிந்து அவரவர் வீடுகளுக்கு தனிமைப்படுத்த அனுப்பப்பட்டனர்.

அதேபோல், வெளிநாட்டு குடியுரிமைப் பெற்ற இந்தியர்கள், வெளிநாடுகளுக்கு வேலைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல வேண்டிய இந்தியர்கள் மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று 6 சிறப்பு தனி விமானங்களில் வெளிநாடுகளுக்கு சென்றனர். அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு 114, சிங்கப்பூர்  72, துபாய் 148, ஓமன் 68, இலங்கை 112, அபுதாபி 168 என மொத்தம் 682 இந்தியர்கள் 6 சிறப்பு தனி விமானங்களில் சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில்  ஒரே நாளில் 16 விமானங்களில் 1,728 இந்தியர்கள் பயணித்தனர்.


Tags : Indians , 1,046 Indians stranded abroad rescued
× RELATED அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின்...