×

பிரபல தடயவியல் நிபுணர் சஸ்பெண்ட் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை:  சுஷாந்த் சிங் தற்கொலை,  பிரேத பரிசோதனை தொடர்பாக ஒரு தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது. அதில் கலந்துகொண்ட பிரபல தடயவியல் நிபுணர் டாக்டர் டைக்கால் சென்னை அருகே மரணமடைந்த ஒரு பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை குறித்து பேசியுள்ளார்.  பிரேத பரிசோதனை ரகசிய ஆவணம். அது குறித்து பேசியது தவறு என்று  டாக்டர் டைக்காலுக்கு ஒரு மாதம் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டைக்கால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் விவாதித்த பிரேத பரிசோதனை தொடர்பான வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது. தேவையில்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கும் வழக்கில் சம்மந்தப்பட்டவர்களுக்கும் தொந்தரவு தந்துள்ளார் என்று  வாதிடப்பட்டது.  வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் நடவடிக்கையில் தலையிட முடியாது. இந்த மனுவுக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அக்டோபர் 29ம் தேதி பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.



Tags : ICC ,expert , ICC refuses to suspend prominent forensic expert
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...