×

அக். மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்: சமூக இடைவெளியை கடைபிக்க அரசு உத்தரவு

சென்னை: அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு கடந்த ஏப்., மே, மற்றும் ஜூன் மாதங்களில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு டோக்கன் முறையை கடைபிடித்தது. தற்போது தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை ரேஷனில் வாங்குவதற்கு டோக்கன் வழங்கப்படும்.வரும் 28,29,30 ஆகிய தேதிகளில் ரேஷன்கடை பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே வந்து டோக்கன் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் டோக்கனில் குறிப்பிடாத நேரத்தில் பொருள் வழங்கப்பட மாட்டாது என ஊழியர்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரேசன் பொருட்களை டோக்கன், சமூக இடைவெளி நடைமுறையை கடைப்பிடித்து மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Oct. , Essential, token, government, order
× RELATED ரேஷன் பொருட்கள் வாங்காமல்...