அக். 2 உலக அமைதி தினம், அதை உருவாக்கியது இந்தியா; உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஐக்கிய நாடுகள் சபையை நிறுவிய நாடுகளில் ஒன்று என்பதில் இந்தியா பெருமை கொள்கிறது என ஐநா சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். சர்வதேச அளவிலான பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கின்றனர். இன்றைய சவால்கள் முற்றிலும் வேறுபட்டுள்ளன என கூறினார். ஐ.நா. வரலாற்றில் முதல் முறையாக காணொலி மூலம் கூட்டம் நடைபெற்று வருகிறது. 130 கோடி மக்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த கூட்டத்தில் பேசுகிறேன் எனவும் கூறினார். கொரோனாவால் ஏராளமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என தெரிவித்தார். கொரோனாவை கட்டுப்படுத்த ஐ.நா. எடத்த தீவரமான நடவடிக்கைகள் என்ன? என ஐநா கூட்டத்தில் பிரதமர் கேள்வி எழுப்பினார். கடந்த 8-9 மாதங்களாக உலகை கொரோனா அச்சுறுத்தி வருகிறது என கூறினார். மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்.

இந்த உலகத்தை நாங்கள் குடும்பமாக கருதுகிறோம், இது எங்கள் கலாசாரம் என கூறினார்.  நமது நாடு சவால்களும், தேவைகளும் இன்று புதியவையாக இருக்கிறது என கூறினார். கொரோனாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என கூறினார். ஐ.நா.வை ஏற்படத்தியதின் அடிப்படை நோக்கத்தை நிறைவேற்ற வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது என கூறினார். உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என எடுத்துரைத்தார். உலகில் அமைதியை நிலைநாட்ட இந்தியா பல வீரர்களை இழந்துள்ளது என கூறினார். அக். 2 உலக அமைதி தினம், அதை உருவாக்கியது இந்தியா என தெரிவித்தார். கால மாற்றத்திற்கேற்ப ஐ.நாவும் தனது செயல்முறைகளை மாற்ற வேண்டியுள்ளது என கூறினார். ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்காக இந்திய மக்கள் நீண்ட காலமாக காத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Related Stories: