×

திருத்தி அமைக்கப்பட்ட சுங்கக்கட்டண விவரம் தமிழக அரசு வெளியீடு

சென்னை: திருத்தி அமைக்கப்பட்ட சுங்கக் கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கார், பேருந்து, இலகுரக வாகனம், கனரக வாகனங்களுக்கான கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்களுக்கு ஒரு நடைக்கு ரூ.10-ம், திரும்பிவர ரூ.19ம் தினசரி கட்டணம் ரூ.33 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 சக்கர வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் ரூ.311, மாதாந்திர எல்.சி.எம் கட்டணம் ரூ.300ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கார்கள் ஒரு நடைக்கு ரூ.30ம், ஒருமுறை சென்றுவர ரூ.60ம் கட்டணமாக செலுத்த வேண்டும். கார்களுக்கு தினசரி கட்டணம் ரூ.100, மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.2,390ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கார்களுக்கு மாதாந்திர எல்.சி.எம் கட்டணம் ரூ.300, நடை அடிப்படையிலான பாஸ் கட்டணம் ரூ.1,100 ஆகும். இலகுரக வாகனங்கள் ஒரு நடை செல்ல ரூ.49 கட்டணம், திரும்பி வர ரூ.98, தினசரி ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu , Toll, Government of Tamil Nadu, Publication
× RELATED களுக்கு புதிய ஊதியத்தை பரிந்துரை செய்ய குழு: தமிழக அரசு உத்தரவு