ஐ.நா. பொது சபையில் இன்று நடைபெறும் கூட்டத்தில், மெய்நிகர் முறையில் பிரதமர் நரேந்திர மோடி உரை

டெல்லி: ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24 அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைக்கப்பட்டது. சர்வதேச நாடுகளுக்கிடையே அமைதி, நல்லுறவு, பாதுகாப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதே ஐ.நா.வின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா. பொது சபை தற்போது சிறப்புமிக்க 75-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பொதுவாக ஐ.நா. பொதுக் கூட்டத்தின் ஒவ்வொரு அமர்வின் தொடக்கத்திலும் விவாதம் நடைபெறும். ஒரு வாரம் தொடர்ந்து நடைபெறும் இக்கூட்டத்தில் 193 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் என ஆயிரக்கணக்கானோர் விவாதத்தில் பங்கேற்பார்கள்.

இம்முறை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்திற்கு உலக தலைவர்களால் வர முடியாதா நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உறுப்பு நாடுகள் தங்கள் அரசாங்கங்கள் அல்லது தலைவர்களின் உரையை முன்னரே பதிவு செய்து அளிக்குமாறும், அவற்றை விவாதத்தின் போது பொதுக் கூட்ட அரங்கில் ஒளிபரப்புவோம் என்றும் ஐ.நா. அறிவித்திருந்தது. ஒவ்வொரு நாட்டின் தலைவர்கள் பேசும் வீடியோக்களும் 15 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஐ.நா. வரலாற்றில் ஆண்டு பொதுக் கூட்டம் மெய்நிகர் முறையில் இன்று நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

 

ஐ.நா. பொதுசபையின் 75 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஆண்டுப் பொதுக் கூட்டம் உலகத் தலைவர்கள் நேரடியாக பங்கேற்காமல், மெய் நிகர் முறையில் நடைபெற உள்ளது. அதாவது உலகத் தலைவர்கள் அனைவரும் தங்களது உரையை முன்கூட்டியே வீடியோவில் பதிவிட்டு அனுப்பி, அதனை கூட்டத்தின் போது ஒளிபரப்பும் வகையில் நடத்தப்பட உள்ளது. அதன்படி இந்நிகழ்ச்சியானது இன்று உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் (இந்திய நேரப்படி மாலை 6.30 மணி) பிரதமர் நரேந்திர மோடியின் உரை இடம்பெற உள்ளது. அடுத்த இரண்டு வாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும் பொது விவாதம் இறுதி செய்யப்படும் என்றும், கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கிய பொது விவாதம் செப்டம்பர் 29-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பொதுக் கூட்டத்தில் பேசும் வீடியோவை உலகின் முதல் தலைவராக ஒளிபரப்ப நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. 

Related Stories: