×

3.27 கோடி பேருக்கு பாதிப்பு.. 9.92 லட்சம் பேர் பலி...2.41 கோடி பேர் குணம்: கொரோனாவுக்கான தடுப்பூசிக்காக காத்திருக்கும் உலக நாடுகள்!!

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்தை கடந்தது.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 27 லட்சத்து 44 ஆயிரத்து 429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 75 லட்சத்து 29 ஆயிரத்து 262 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 63 ஆயிரத்து 718 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 41 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 92 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 7,244,184
இந்தியா - 5,901,571
பிரேசில் - 4,692,579
ரஷியா - 1,136,048
கொலம்பியா - 7,98,317
பெரு - 7,94,584
மெக்சிகோ - 7,20,858
ஸ்பெயின் - 7,35,198
அர்ஜெண்டினா - 6,91,235
தென் ஆப்பிரிக்கா - 6,68,529

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 2,08,440
பிரேசில் - 1,40,709
இந்தியா - 93,410
மெக்சிகோ - 75,844
இங்கிலாந்து - 41,936
இத்தாலி - 35,781
பெரு - 32,037
பிரான்ஸ் - 31,661
ஸ்பெயின் - 31,232
ஈரான் - 25,222

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா - 4,846,168
அமெரிக்கா - 4,480,719
பிரேசில் - 4,040,949
ரஷியா - 9,34,146
கொலம்பியா - 6,87,477
பெரு - 6,50,948
தென் ஆப்ரிக்கா - 5,99,149

Tags : nations ,world , 3.23 crore people were affected .. 9.92 lakh people were killed ... 2.41 crore people were cured: the nations of the world are waiting for the corona vaccine !!...
× RELATED ஜெர்மனி, அமெரிக்காவை தொடர்ந்து...