ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளிகள் 4 பேர் தப்பி ஓட்டம்

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளிகள் 4 பேர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், வியாசர்பாடி, பொன்னேரி, அம்பத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வடசென்னையை சேர்ந்த 4 பேர் காய்ச்சல் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் 4 பேரும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே, நேற்று காலை இந்த 4 பேரும் தங்களது மருத்துவ பரிசோதனை சான்றை பெற்று வருவதாக கூறி, வார்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர். ஆனால், நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் அவர்களை பல இடங்களில் தேடினர். ஆனால், கிடைக்கவில்லை. அவர்கள் தப்பியோடியது தெரிந்தத. உடனே, இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிய 4 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>