திருமணம் தடைபட்டதால் பட்டதாரி பெண் தற்கொலை: நிச்சயமான தேதியில் இறந்த சோகம்

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பாலாஜி நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தீபிகா  (26). பிஎஸ்சி பட்டதாரியான இவர்  இதே பகுதி ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், சாலிகிராமத்தை சேர்ந்த பாலாஜி சிங் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயம்  செய்தனர். இதனிடையே, பாலாஜி சிங் குடும்பத்திற்கும், தீபிகா குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, திருமண ஏற்பாடு பாதியில்  நின்றது.

இதனால், மனமுடைந்து காணப்பட்ட தீபிகா, திருமணம் தடைபட்டு ஓராண்டு ஆவதால், நிச்சயிக்கப்பட்ட நாளான நேற்று வீட்டில் யாரும் இல்லாத  போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். தகவலறிந்து அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் அம்பத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories:

>