‘ஜங்கரன் சிட்ஸ்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

சென்னை: சென்னை சூளைமேடு  ராகவன் தெருவில் ‘ஜங்கரன் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு முதல்  இயங்கி வந்தது. இதை செந்தில்குமார் மற்றும் ஷர்மிளா ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு சீட்டு முதிர்வு  தொகையை வழங்காமல் ஏமாற்றியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்படி நிதி  நிறுவன இயக்குநர் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த நிதி நிறுவனம் சென்னை முழுவதும் செயல்பட்டு வந்துள்ளது.

எனவே, இதில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் கிண்டி சிட்கோ பழைய கட்டிட வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம்  புகார் அளிக்கலாம். மேற்கண்ட நிதி நிறுவனத்தில் பணம் கட்டியதற்கான ரசீது மற்றும் சீட்டு பாஸ்புக் ஆகியவற்றை நேரில் வந்து சமர்ப்பிக்க  வேண்டும், என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>