வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து: விவசாயிகள் சாலை மறியல்

புழல்: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மத்திய அரசு கொண்டுவந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம்,  விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தம் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை எதிர்த்து இந்தியா முழுவதும்  விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு  நல்லூர் சுங்க சாவடி அருகில் சென்னை - கொல்கத்தா சாலையில் மாநில விவசாயிகள் சங்க பொது செயலாளர் சண்முகம் தலைமையில் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், 10 பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும்  நடக்காமல் இருக்க சோழவரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது  செய்து காரனோடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.

Related Stories: