சொல்லிட்டாங்க...

தாது மணல் விற்பனையில் அதிமுக அரசு ஏதோ உள்நோக்கத்துடன் ெதாடர்ந்துகபட நாடகம் ஆடி வருகிறது.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

நிர்வாக வசதிக்காக அண்ணா பல்கலையை பிரிப்பது வரவேற்கத்தக்கது என்றாலும்கூட, புதிய பல்கலைக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை சூட்டுவது நியாயம் அல்ல.

- பாமக நிறுவனர் ராமதாஸ்

நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கிற வகையில், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு என்ற போர்வையில் பாஜ அரசு அவசர சட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

மத்தியஅரசின் 3 புதிய சட்டங்களால் பதுக்கல், கள்ள மார்க்கெட் அதிகரிக்கும். நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்படும் அபாயம்

உள்ளது.

- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

Related Stories: