×

வாஷிங்டன் சுந்தருக்கு ஏன் குறைவான ஓவர்?

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்(20)32  2018ம் ஆண்டு முதல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை ஒருப் போட்டியில் கூட சுந்தர் முழுமையாக 4ஓவர்களும் பந்து வீச கேப்டன் கோஹ்லி அனுமதித்ததில்லை.  நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசியும், சுந்தருக்கு  2ஓவர்கள் மட்டுமே தரப்பட்டது. அதுமட்டுமலல் சர்வதேச டி20 போட்டிகளிலும் சுந்தருக்கு 4ஓவர்கள் பந்து வீச  கேப்டன் கோஹ்லி வாய்ப்பு தருவதில்லை. கடந்த ஆண்டு கோஹ்லி ஓய்வில் இருக்க, ரோகித் சர்மா  கேப்டனாக இருந்த போதுதான் சுந்தருக்கு 4 ஓவர்கள் முழுமையாக பந்து வீச வாய்ப்பு தந்தார்.

கோஹ்லிக்கு அபராதம்
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நேற்று முன்தினம் டாஸ் வென்ற பெங்களூர் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் பந்து வீச கூடுதலாக 21 நிமிடங்கள்  ஆனது. ஒரு இன்னிங்சுக்கு அனுமதிக்கப்பட்ட நேரம் ஒரு மணி 30 நிமிடங்கள். எனவே பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.Tags : Washington Sundar , Why less over for Washington Sundar?
× RELATED துபாயில் இன்று சென்னையுடன் மோதல்: கட்டாய வெற்றி நெருக்கடியில் கொல்கத்தா