×

மறைந்த SPB அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மறைந்த எஸ்.பி.பி.யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.பி.பி. உடலுக்கு திரளானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எஸ்.பி.பி. உடல் நாளை காலை 11 மணிக்கு பொன்னேரி அருகே தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இரவு முழுவதும் அஞ்சலிக்காக உடலை வைத்திருக்க மாநகராட்சி அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் தாமரைப்பாக்கத்தில் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதியில்லை என திருவள்ளூர் எஸ்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படுகிறது. தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்பிபியின் பண்ணை வீட்டில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் கூறினார்.

இந்த இக்கட்டான சூழலில் தமிழக அரசு ஓர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிப்பதாவது: அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் தமிழகம மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின்
மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருடைய உடலுக்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கோரியிருந்தனர்.

Tags : SPB ,Palanisamy ,announcement , SPB, Government Honors, Chief Minister Palanisamy, Notice
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...