×

தமிழகத்தில் மேலும் 5,679 பேருக்கு கொரோனா; மாநிலத்தின் மொத்த பாதிப்பு 5.69 லட்சமாக ஆக உயர்வு...சுகாதாரத்துறை அறிக்கை.!!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,69,370-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட  அறிக்கையில்,  

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,13,836 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,626 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 72 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,148-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,193 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,60,926 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 67,01,677 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 93,002 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 182 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,43,470 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,455 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,25,870 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும்  2,224 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 30 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

* மேற்குவங்கம் - 03
* கர்நாடகா - 2
* ஜார்கண்ட் - 01
* கேரளா - 02

Tags : Corona ,state ,Tamil Nadu ,Health Department , Tamil Nadu, Corona, Health Department
× RELATED மாநில விலங்கான வரையாடுகள் கணக்கெடுப்பு ஏப்.29ல் தொடக்கம்