×

ஆயிரம் நிலவுகள் அள்ளித் தந்த வசீகரக் குரல்; இதயம் கனக்கும் அஞ்சலி: எஸ்.பி.பி. மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். நம் வாழ்க்கையில் உறைந்து இருந்திருப்பவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குரல், பாடல்கள் மூலம் எஸ்.பி.பி. என்றும் நிலைத்து இருப்பார் என்று உதயநிதி குறிப்பிட்டுள்ளார். ஆயிரம் நிலவுகள் அள்ளித் தந்த வசீகரக் குரல். இதயம் கனக்கும் அஞ்சலி. கலைஞர்களுக்கு மரணம் இல்லை. என்றென்றும் எங்களுடன் வாழ்வீர்கள் எஸ்.பி.பி சார். அவரது குடும்பத்தினருக்கு, ரசிகர்களில் ஒருவனாக எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


Tags : SBP Udayanithi Stalin ,death , Singer, SBP, DMK Youth Secretary Udayanithi Stalin, Tribute
× RELATED நாம ஜெயிக்கணும்னா குரலை உயர்த்தணும்!