×

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!

கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலம் தியோரியா அடுத்த கவுரி பஜாரைச் சேர்ந்த 26 வயதுடைய கர்ப்பிணி பெண், கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் (பிஆர்டி) மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு 4 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் ​​3 குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, பிஆர்டி மருத்துவக் கல்லூரி முதல்வர் கணேஷ்குமார் கூறுகையில், ‘கவுரி பஜார் பகுதியைச் சேர்ந்த அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. பிரசவ வலி ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அந்த பெண் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தார். குழந்தைகள் 980 கிராம் முதல் ஒன்றரை கிலோ வரை எடையுள்ளன. மூன்று குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. நான்காவது குழந்தை வென்டிலேட்டர் ஆதரவில் உள்ளது. குழந்தைகளின் தாய் ஆரோக்கியமாக உள்ளார். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நான்கு குழந்தைகளை பாதுகாப்புடன் பிரசவித்தது பெரிய விஷயமாக உள்ளது. நான்கு குழந்தைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன’ என்றார்.

Tags : children ,Uttar Pradesh , Gorakhpur, Corona, pregnant, single delivery 4 children
× RELATED 3 குழந்தைகளுக்கு தாயாக இருந்து கொண்டு...