×

பச்சிளம் குழந்தைக்கு கொரோனாவை குணப்படுத்தி சென்னை மருத்துவர்கள் சாதனை: அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பிரித்தெடுத்து சிகிச்சை!

சென்னை:  நுரையீரல் கூட முழுமையாக வளர்ந்திராத பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்டிருந்த கொரோனா தொற்றை குணப்படுத்தி சென்னை மருத்துவர்கள் சாதனை படைத்திருக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7 மாத கர்ப்பிணி ஒருவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் வெண்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. நுரையீரல் கூட முழுமையாக வளர்ந்திருக்காத கருவில் இருந்த குழந்தைக்கும் தொற்று பரவி இருந்தது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.

பின்னர், தொடர் சிகிச்சை மூலம் கொரோனா தொற்றிலிருந்து தாய் மற்றும் குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வாரத்திற்கு பின் தாய் பிரியதர்ஷினிக்கு உடல்நிலை தேறியதும், குழந்தையை முதன் முறையாக பார்க்க அனுமதிக்கப்பட்டார். நலமுடன் உள்ளதால் தாயும் சேயும் விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து, துரிதமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு தாயையும் சேயையும் காப்பாற்றியதால் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags : doctors ,Chennai ,baby , Green Child, Corona, Chennai Doctors, Achievement
× RELATED நுரையீரல் பாதிப்பை கண்டறிய முடியாத...