×

எஸ்.பி.பி. மறைந்தாலும் கானக்குரல் கொண்டு அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் மறையாது ஒலிக்கும்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.  எஸ்.பி.பியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் இத்துயரை தாங்கிக்கொள்ளும் மனவலிமை பெற வேண்டுகிறேன். தேமதுரக் குரல் கொண்டு இவ்வையகத்தை மகிழ்வித்த பாடகர் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயர் அடைந்தேன். எஸ்.பி.பி. மறைந்தாலும் கானக்குரல் கொண்டு அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் மறையாது ஒலிக்கும் என கூறினார்.


Tags : SBP ,O. Panneerselvam , SBP The songs he sang with vocals will never fade away: O. Panneerselvam
× RELATED எஸ்.பி.பி.யின் மரணம் துக்கத்தை...