×

தென்மேற்கு பருவ மழையால் தேவம்பாடி குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

பெரியகுளம் : கொடைக்கானல்-அடுக்கம் சாலைப்பணி 95 சதவீதம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அடுத்த நவம்பரில் போக்குவரத்து தொடங்க உள்ளதால், மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து அடுக்கம் வழியாக கொடக்கானல் செல்ல புதிதாக சாலை அமைக்கும் திட்டம், 35 ஆண்டுகளுக்கு முன், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கின.

அதன்பின் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. 2006ல் திமுக ஆட்சியில் சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது. 2011ல் அதிமுக ஆட்சியிலும் நிதி ஒதுக்கப்பட்ட பணிகள் நடைபெற்றன. பணிகள் ஆமை வேகத்தில் நடந்தாலும், 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, நவம்பரில் சாலை போக்குவரத்து திறக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால், மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : pond ,Devambadi , Periyakulam: Following the 95 percent completion of the Kodaikanal-Adukkam road project,
× RELATED திண்டுக்கல் அருகே நீர் திறக்கக் கோரி...