×

மலைவாழ் பள்ளி மாணவர்களுக்கு காகித பைகள் தயாரிப்பு பயிற்சி

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி ஆனைக்கட்டி மந்தியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள சமூக கூடராத்தில் மாணவர்களுக்கு காகித பைகள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அட்டப்பாடி மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு ஆன்லைன் படிப்புடன் கைத்தொழில் பயிற்சிகளும், கலை, அறிவியல் மற்றும் உடல்பயிற்சி, தடகளப்போட்டிகள் ஆகியவை அட்டப்பாடி அகளி ஊராட்சிகள் சார்பில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இதனை பயிற்சிப்பெற்ற ஆசிரியர், ஆசிரியைகள் வழங்கி வருகின்றனர். அட்டப்பாடியில் முதல் கட்டமாக 40 ஊர்களில் உள்ள மலைவாழ் மக்களுக்கு பயிற்சிகள் அளிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

Tags : hill station students , Palakkad: For students in the community tent at the Attappadi Anaikkatti Mandiyamman temple complex in Palakkad district
× RELATED இயற்கை பேரிடரை எதிர்கொள்ள செயல்விளக்க பயிற்சி