×

ஊட்டி-கோத்தகிரி சாலை தடுப்புச்சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள்

ஊட்டி : ஊட்டி-கோத்தகிரி சாலையில் உள்ள தடுப்பு சுவர்கள் மற்றும் கான்வெக்ஸ் கண்ணாடி தடுப்புகளில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. பொருளாதார ரீதியான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என கூறப்படும் நிலையில் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தடுப்பூசி பயன்பாட்டு வரும் வரை கொரோனாவில் இருந்து காத்து கொள்ள கட்டாயம் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கட்டாயம் கை கழுவுவது போன்ற வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பும், மத்திய, மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.

பொதுமக்களுக்கும் முக கவசம் அணிவதை கடைபிடிக்க துவங்கியுள்ளனர். இருப்பினும் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் மூக்கு, வாய் மூடியிருக்கும் வகையில் முக கவசம் அணிவதில்லை. இதனால் தொற்று அபாயம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி - கோத்தகிரியில் உள்ள தடுப்புசுவர்கள், வளைவுகளில் உள்ள கான்வெக்ஸ் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தடுப்புச்சுவர்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு படங்கள், வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

Tags : Corona ,Ooty-Kotagiri , Ooty: Corona awareness slogans are written on the retaining walls and convex glass blocks on the Ooty-Kotagiri road.
× RELATED சிவந்திபுரத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணி