×

மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம்.. திமுக தலைமையில் விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி அமையும்.. : தமிழக மேலிட பொறுப்பாளர் திணேஷ் குண்டுராவ் உறுதி!!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் திணேஷ் குண்டுராவ் சந்தித்து பேசினார். மத்திய பாஜ அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து நேற்று முதல் நாடு தழுவிய தொடர் போராட்டங்களை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் விவசாய சட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட வேண்டிய போராட்டங்கள் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தினேஷ் குண்டுராவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள அவசர சட்டங்கள் குறித்த நிருபர்கள் சந்திப்பு, சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்தது. அப்போது, அவர் கூறியதாவது:  மத்தியில் ஆளும் மோடி தலையிலான பாஜ அரசு ஜனநாயக விரோத போக்குடன் நடந்து வருகிறது. கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து வருகிறது. அனைத்து துறைகளிலும் இந்த அரசு தோல்வியை சந்தித்து வருகிறது. மாநிலங்களின் உரிமைகளை பறித்து அதிகாரங்களை மத்தியில் குவித்து வருகிறது, என்றார்.  
 
இந்த நிலையில் இன்று காலை தமிழக மேலிட பொறுப்பாளர் திணேஷ் குண்டுராவ் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன், கழகப் பொருளாளர் திரு. டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் திரு. கே.என்.நேரு மற்றும் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர்.ராமசாமி, காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் திரு. கோபண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திணேஷ் குண்டுராவ்,திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். திமுக தலைமையில் விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி அமையும். மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம், என்றார்.


Tags : MK Stalin ,Dinesh Kundurao ,DMK ,Tamil Nadu , MK Stalin, DMK, Tamil Nadu, Superintendent, Dinesh Kundurao, confirmed
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...