×

கொள்ளிடம் பகுதியில் நெல் கொள்முதல் நிறுத்தம் -விவசாயிகள் கடும் அவதி

கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினந்தோறும் 600 முதல் 800 மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. இதேபோல் மாதிரவேளூர், பழைய பாளையம், பச்சை பெருமாநல்லூர், மாதானம் ஆகிய பகுதிகளிலும் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன.

தற்போது கொள்முதல் நிறுத்தப்பட்டு விட்டதால் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 5000 முதல் 8000 வரை நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு மூடி வைத்து விவசாயிகளே பாதுகாத்து வருகின்றனர். திடீரென பெய்துவரும் மழையின் காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

விவசாயிகள் கொண்டு வந்த அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்து 24 மணி நேரமும் காவல் காத்த வண்ணம் இருந்து வருகின்றனர். குன்னம் கிராமத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் மட்டும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி கொள்ளிடம் பகுதியிலுள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Paddy ,Kollidam ,area - Farmers , Kollidam: Farmers in Kollidam area are suffering due to halt in paddy procurement.
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி