×

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் : இந்திய அளவில் #NoTo FarmBills ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம்!!

டெல்லி : மத்திய அரசு வேளாண்துறை சார்ந்த மூன்று சட்டங்களை நிறைவேற்றியது. மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளை “கருப்பு ஞாயிறு” என விவசாயிகள் சங்கங்கள் அழைக்கின்றன. இந்தச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் இந்திய விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் எவ்விதப் பாதுகாப்பும் இருக்காது. முழுக்க முழுக்க பன்னாட்டு நிறுவனங்களையும், உள்நாட்டுப் பெருநிறுவனங்களையும் சார்ந்து வாழ வேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவர். இந்த மிக மிக மோசமான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள், பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு செப்டம்பர் 25-ம் தேதி சாலை மறியல் மற்றும் சட்ட நகலெரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் 2வது நாளாக விவசாயிகளுக்கு குடும்பத்துடன் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  
அத்துடன், வேளாண் மசோதாகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது இன்று நாடு தழுவிய அளவில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு பாரதி கிசான் சங்கம் உள்பட மொத்தம் 31 விவசாய குழுக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிரோன்மணி அகாலி தளம், ஆம் ஆத்மி மற்றும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி உள்பட மொத்தம் 19 கட்சிகள் விவசாயிகளின் இன்று மேற்கொள்ளும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு அளித்துள்ளன.

இந்த நிலையில் வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டம் அகில இந்திய அளவில் தீவிரமாக நடந்து வருகிறது.  தற்போது ட்விட்டரில் #NoTo FarmBills ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags : government ,India , Agriculture bill, farmers, struggle
× RELATED எம்எஸ்எம்இ சட்டத்தால் ஜவுளிகளை...