×

வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம்

தஞ்சை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும், அந்த சட்டத்தினை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகளும் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் தற்போது டெல்டா மாவட்டத்தின் முக்கிய பகுதியாக இருக்கக்கூடிய தஞ்சை மாவட்டத்தில் தஞ்சையிலிருந்து திருச்சி செல்லக்கூடிய தேசிய நெடுச்சாலையில் செங்கிப்பட்டி என்னும் இடத்தில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து மத்திய அரசு தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு வஞ்சிக்கும் வகையில் சட்டங்களை கொண்டு வருவதாகவும், மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.குறிப்பாக மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சாலையில் படுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு மைசூர் வங்கி சதுக்கத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர்.

விவசாய சங்கம், தொழில் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் மசோதாக்களை திரும்ப பெறாவிட்டால் 28ல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் சட்ட நகலை எரித்து சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர். திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு கூறி 20 விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

Tags : Tamil Nadu , Central Government, Agriculture Bill, Farmers, Struggle
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...