×

பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: உடல்நிலை குறித்து மருத்துவர்கள் ஆலோசனை

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள எஸ்.பி.பி உடல்நிலை குறித்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். ஆலோசனைக்கு பிறகு மருத்துவர் குழு அறிக்கை வெளியிட உள்ளனர்.

எஸ்.பி.பி.க்கு எக்மோ, இதர கருவிகளுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

அதற்குப் பிறகு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகச் சகஜ நிலைக்கு திரும்பி வந்தார். வாய் வழியாகச் சாப்பிடும் அளவுக்கு அவருடைய உடல்நிலை தேறியது. இதனால் திரையுலகினர், ரசிகர்கள் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

எஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் திடீரென்று நேற்று அவருடைய உடல்நிலை மோசமடைந்ததாகவும், கவலைக்கிடமாக உள்ளதாகவும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இது அவரது ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Background singer ,Doctors ,SBP , SPB, Health, Physicians, Consulting
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை