இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சத்தை தாண்டியது... 92,290 பேர் பலி...குணமானவர்கள் எண்ணிக்கை 47.56 லட்சத்தை தாண்டியது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 92 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி  நேரத்தில், நாட்டில் கொரோனாவால்  புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 86,052 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை  58,18,570 ஆக உயர்ந்தது.

* புதிதாக 1,141 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 92,290 ஆக உயர்ந்தது.

.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 81,177 பேர் குணமடைந்துள்ளனர்;

.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 47,56,164 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,70,116 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 81.74% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.59% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 16.67% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 14,92,409 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 6,89,28,440 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!

    

மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் :275404; குணமடைந்தோர் : 973214; இறப்பு :      34345

தமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46405; குணமடைந்தோர் :  508210 ; இறப்பு :      9076

    

டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 31125 ; குணமடைந்தோர் :  224375 ; இறப்பு :   5123

கேரளா : சிகிச்சை பெறுவோர் :45993 ; குணமடைந்தோர் :  107850 ; இறப்பு :  613

கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :  95568; குணமடைந்தோர் :  444658 ; இறப்பு :  8331

    

ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :69353; குணமடைந்தோர் :579474 ; இறப்பு :   5558

Related Stories: