×

3.23 கோடி பேருக்கு பாதிப்பு.. 9.85 லட்சம் பேர் பலி...2.39 கோடி பேர் குணம் : கொரோனாவுக்கான தடுப்பூசிக்காக காத்திருக்கும் உலக நாடுகள்!!

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்தை கடந்தது.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சமாக அதிகரித்துள்ளது.தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 23 லட்சத்து 94 ஆயிரத்து 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 75 லட்சத்து 3 ஆயிரத்து 76 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 63 ஆயிரத்து 318 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 39 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 71,84,849
இந்தியா - 57,32,519
பிரேசில் - 46,59,909
ரஷியா - 11,28,836
கொலம்பியா - 7,90,823
பெரு - 7,82,695
மெக்சிகோ - 7,10,049
ஸ்பெயின் - 7,04,209
அர்ஜெண்டினா - 6,78,266
தென் ஆப்பிரிக்கா - 6,67,049

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 2,07,516
பிரேசில் - 1,39,883
இந்தியா - 91,149
மெக்சிகோ - 74,949
இங்கிலாந்து - 41,902
இத்தாலி - 35,781
பெரு - 31,870
பிரான்ஸ் - 31,511
ஸ்பெயின் - 31,118
ஈரான் - 25,015

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா - 46,74,988
அமெரிக்கா - 44,31,052
பிரேசில் - 40,23,789
ரஷியா - 9,29,829
கொலம்பியா - 6,74,961
பெரு - 6,36,489
தென் ஆப்ரிக்கா - 5,95,916

Tags : nations ,world , Model Beauty, Actress, Mira Mithun, Case...
× RELATED மழை பெய்தாலே குண்டும், குழியும்தான் கன்னிகாபுரம் மக்கள் புலம்பல்