×

கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் நலம் விசாரிப்பு

சென்னை:  சளி, காய்ச்சல், இருமல்  காரண மாக இந்திய கம்யூனி ஸ்ட் மூத்த தலைவர் நல்ல கண்ணு சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மறுநாள் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து, 4 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு காயச்சல் குணமடைந்து நல்லகண்ணு வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.  இந்நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று  தியாகராய நகர் பகுதியில் உள்ள நல்லகண்ணு வீட்டிற்கு சென்று அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.Tags : Stalin ,Udayanidhi ,Communist Party , Udayanidhi met Stalin, the senior leader of the Communist Party, in person and inquired about Stalin's health
× RELATED மாணவர் இடஒதுக்கீட்டு சதவிகிதத்தை...