×

விஜயகாந்த் குணமடைய தலைவர்கள் வாழ்த்து

சென்னை: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் பழனிசாமி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திடம், விஜயகாந்த் உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன். அவர் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட ேவண்டும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: தேமுதிக தலைவரும் அருமை நண்பருமான விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்தேன். அவர் விரைவில் முழுஉடல் நலம் பெற வேண்டும். அவர் பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் எனவும் விழைகிறேன். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்:  உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்பி மக்கள் சேவையாற்ற வேண்டும்.

Tags : Leaders ,Vijaykanth , Leaders congratulate Vijaykanth on recovery
× RELATED விஜய் சேதுபதி, தோனி மகள்களுக்கு பாலியல் மிரட்டல்.: விஜயகாந்த் கண்டனம்