நள்ளிரவில் பதிவு செய்தவர்களுக்கு அடுத்தடுத்த பதிவு எண்கள் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது: மறுதேர்வு நடத்த அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை

சென்னை: 2019 மார்ச் மாதம் நடந்த உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வில் அதிகளவில் முறைகேடுகள் நடந்துள்ளது. இதனால் உதவி ஆய்வாளர் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என்று தேர்வு எழுதிய மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2019 மார்ச் மாதம் உதவி ஆய்வாளர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வேலூரில் மட்டும் 144 அடுத்தடுத்து பதிவு எண்களை கொண்ட நபர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதேபோல், உடல் தகுதி தேர்வுக்கு தேர்வான 5,275 நபர்களில் 1,254 பேர் முறைகேடாக தேர்வானவர்கள் இதுதொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

 மேலும் மாநில அளவில் முதல் 25 இடங்களை பிடித்த பெரும்பாலானோர் வேலூர், கடலூர், சென்னை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களாக மட்டும் எப்படி இருக்க முடியும், ஆர்டிஐ மூலம் ஓஎம்ஆர் விடைத்தாளை கேட்டபோது தேர்வாணையம் தர மறுத்தது ஏன். தேர்வில் 12 வினாக்களில் குளறுபடி நடந்துள்ளது. சென்னை மதுரவாயில் மையத்தில் தேர்வு எழுதிய நான்கு பேர் எப்படி மாநில அளவில் முதல் 10 இடங்களுக்குள் வர முடிந்தது’ என அடுக்கடுக்கான கேள்விகளை தேர்வு எழுதிய சதீஷ் மற்றும் ராஜ் குமார் ஆகியோர் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர். எனவே உதவி ஆய்வாளர் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories: